Connect with us

வெளுத்து வாங்கும் பாக்கியா..ராதிகா ஷாக்..

Cinema News

வெளுத்து வாங்கும் பாக்கியா..ராதிகா ஷாக்..

முதல் திருமண வாழ்க்கையில், தான் தான் ராஜா என்னும்படியான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, தற்போது காலம் போன கடைசியில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு, அதை மெயின்டெயின் செய்வதற்காக இரண்டாவது மனைவியை திருப்தி படுததுவதற்காக போராடுவதாக கோபி கேரக்டர் அமைந்துள்ளது.

ராதிகாவிடம் மாட்டிக் கொண்டு அவர் முழிபிதுங்குவதை நகைச்சுவை கலந்து கொடுத்துவருகிறார் தொடரின் இயக்குநர். இது ரசிகர்களுக்கு அதிகமான சுவாரஸ்யத்தை கொடுத்து வருகிறது.

அதற்கேற்றாற்போல அந்த கேரக்டரை நடிகர் சதீஷ் மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்வதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கணவன் கேட்ட விவாகரத்தை கொடுக்கும் பாக்யா, தன்னுடைய குடும்பத்திற்கான போராட்டத்தை சரியாக கொண்டு செல்கிறார். ஆனால் எவ்வளவுதான் ஆங்கில வகுப்பு, கேன்டீன் கான்டிராக்ட் என அவர் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தாலும், சொல்லுங்க அத்த என்று பம்முவது அதிகமான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

ஆனால் ஒரு குடும்பத்தை சரியாக கொண்டு செல்ல வேண்டுமென்றால் இத்தகைய பணிவு தேவைதானோ என்று சாதாரண பெண்களுக்கு பாடம் எடுக்கிறார் பாக்யா.

இதனிடையே, பாக்யாவின் வளர்ச்சியை பிடிக்காத ராதிகா, அவரை தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறார். ஆரம்பத்தில் டீச்சர், டீச்சர் என்று உறவை மேம்படுத்திய ராதிகா, தற்போது பாக்யாவை பாதாளத்திற்கு தள்ளும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அவரது கேரக்டர் அழகான வில்லிக்கான அடித்தளத்தை போட்டு வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்தத் தொடரின் ப்ரமோவில், ராதிகாவின் அலுவலக கேன்டீன் கான்ட்டிராக்டை எடுத்து, அனைவருக்கும் உணவு சப்ளை செய்கிறார் பாக்யா. அங்கு வரும் ராதிகா, உணவு தரம், சுவை சரியில்லை என்று தனக்கு புகார் வந்ததாக வம்பிழுக்கிறார்.

தொடர்ந்து அங்கு சாப்பிடுபவர்களில் ஒருவர் உணவு சரியில்லை என்று கூறினாலும் ராதிகாவின் புகாரை தான் ஏற்பதாக பாக்யா சவால் விடுகிறார்.

அதற்கு ஏற்றாற்போலவே, அங்கிருப்பவர்கள் எல்லாம் உணவு சிறப்பாக உள்ளதாக சர்ட்டிபிகேட் கொடுக்கின்றனர். இதையடுத்து, ராதிகாவிற்கு வந்த இமெயிலும் உணவு சிறப்பாக இருப்பதாகவே வந்திருக்கும் என்றும் ராதிகா அதை மறுபடியும் செக் செய்ய வேண்டும் என்றும் கூறும் பாக்யா, ராதிகாவிற்கு இமெயில் செக் செய்யத் தெரியுமா என்று பதிலுக்கு வம்பிழுக்கிறார். இதனால் கடுப்பாகும் ராதிகா அங்கிருந்து நகர்கிறார்.

இவ்வாறாக தற்போது வெளியாகியுள்ள இந்தத் தொடரின் ப்ரமோவில் காணப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  WTC Final 2023: "கோலியின் Form ஆஸ்திரேலிய அணிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!" ரிக்கி பாண்டிங் கருத்து!

More in Cinema News

To Top