Connect with us

அட்ரா சக்க : ஆஸ்கர் விருதுக்கான இறுதிபட்டியலில் RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்..

Cinema News

அட்ரா சக்க : ஆஸ்கர் விருதுக்கான இறுதிபட்டியலில் RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்..

2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருதுகளுக்கான பைனல் நாமினேஷன் இந்திய நேரப்படி இன்று மாலை 7 மணிக்கு அறிவிக்கப்படட்டது . இதில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் மொத்தம் 15 பிரிவுகளில் போட்டியிடுகிறது.

ஏற்கனவே இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று அசத்தியிருந்தது. இந்நிலையில் ஆஸ்கர் இறுதி நாமினேஷனில் குறைந்தபட்சம் 6 பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நாமினேட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது .

அந்த வகையில் ஆஸ்கர் விருதுக்கான இறுதிபட்டியலில் RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றததுள்ளது . இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள இந்திய சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது .

ராஜமெளலி இயக்கிய’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன், சமுத்திரகனி என பெரிய முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது . கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான ஆர்ஆர்ஆர், பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்து கெத்து காட்டியது.

ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கார் விருதுகளை வெல்லும் என ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆரூடம் கூறியிருந்தனர். சிறந்த படம், சிறந்த இயக்குநர், ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த முன்னணி நடிகர், சிறந்த துணை, சிறந்த துணை நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த பாடல் உட்பட மொத்தம் 14 பிரிவுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் லிஸ்ட் அறிவிக்கப்பட்டுள்ளது . அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் சதுக்கத்தில் இருந்து ஆஸ்கர் இறுதி நாமினேஷன் அறிவிக்கப்பட்டுள்ளது .

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்று அசத்தியுள்ளது. இதனால் இந்தப் பாடல் ஆஸ்கர் விருதையும் வாகைசூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி பட்டியலில் கெத்தாக நுழைந்துள்ளது .

இந்தியாவில் இருந்து ஏஆர் ரஹ்மான் மட்டுமே சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து கீரவாணிக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top