Connect with us

அட்ரா சக்க..மூன்று விருதுகளை தட்டி தூக்கிய கர்ணன் திரைப்படம்..! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்..

Celebrities

அட்ரா சக்க..மூன்று விருதுகளை தட்டி தூக்கிய கர்ணன் திரைப்படம்..! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்..

திரையுலகில் தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் ,முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் . தமிழ், பாலிவுட் என இந்திய சினிமாவில் தாறுமாறாக கலக்கி வந்த அவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று அழுத்தமான கால் தடத்தை பதித்துவிட்டார் .

இதில் கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் கர்ணன். இப்படத்தில் லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தில் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

Karnan' review: Dhanush leads a hard-hitting film on caste | The News Minute

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் SIIMA விருதுக்கான விழா நேற்று முன்தினம் பெங்களூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்காக மூன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை சந்தோஷ் நாராயணன் வென்றார். சிறந்த துணை நடிகைக்கான விருதை லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலி வென்றார். சிறந்த பின்ணனி பாடகிக்கான விருதினை தீ வென்றுள்ளார் ஆனால் அவர் சார்பாக அந்த விருதினை சந்தோஷ் நாராயணன் பெற்றுக்கொண்டார். மொத்தம் கர்ணன் திரைப்படம், 3 சைமா விருதிகளை பெற்றுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top