Connect with us

படப்பிடிப்பின்போது உயிரிழந்த உதவி இயக்குனர்..! நடிகர் சாந்தனு பதிவிட்ட உருக்கமான பதிவு…

Cinema News

படப்பிடிப்பின்போது உயிரிழந்த உதவி இயக்குனர்..! நடிகர் சாந்தனு பதிவிட்ட உருக்கமான பதிவு…

தமிழ் சினிமாவில் கதை ,திரைக்கதை, இயக்கம் , நடிப்பு என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் பாக்யராஜ். இவரின் அன்பு மகன் சாந்தனு சக்கரக்கட்டி, மாஸ்டர், முப்பரிமாணம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இராவண கோட்டம் என்ற படத்தில் சாந்தனு மும்மரமாக நடித்து வருகிறார். அண்மையில் இவர், ராமகிருஷ்ணா என்ற உதவி இயக்குனரின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் .

நேற்று என்னுடைய நண்பனை இழந்துவிட்டேன். அவனுக்கு 26 வயது தான் ஆகிறது. அவன் மிக திறமையான உதவி இயக்குனர், அவனுக்கு எந்த வித தவறான பழக்கங்கள் இல்லை. ஆரோக்கியமாக தான் இருந்தான், ஆனால் அவனை கடவுள் சீக்கிரமாக அழைத்து சென்றுவிட்டார்.

அவன் கீழே சரிந்து விழுந்த சில நிமிடங்களில் அவனது உயிர் பிரிந்துவிட்டது. இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால். அவன் இறப்பதற்கு முன்பு எனது மொபைல் போனுக்கு அழைத்துள்ளார்.

ஆனால் அந்த சமயத்தில் என்னால் அவனின் அழைப்பை எடுக்க முடியவில்லை. வாழ்க்கையின் அடுத்த நிமிடம் நிச்சயமற்றது அதனால் வெறுப்பு, ஈகோ அனைத்தையும் மறந்து விட்டு , மகிழ்ச்சியாக வாழ்வோம்” உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இருள் சூழ்ந்த சென்னையில் படிப்படியாக மின் விநியோகம் - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

More in Cinema News

To Top