Connect with us

அருண் விஜய்யின் ‘யானை’ படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் பாடல் ப்ரோமோ!

Cinema News

அருண் விஜய்யின் ‘யானை’ படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் பாடல் ப்ரோமோ!

அருண் விஜய்யின் வரவிருக்கும் அதிரடி படமான யானை தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது மற்றும் படம் பிப்ரவரியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை .

மேலும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள யானை திரைபடத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். யானை திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யானை திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக “ஏலம்மா ஏலா” என்ற பாடல் நாளை (ஜனவரி 13) மாலை 5 மணிக்கு பொங்கல் பரிசாக ரிலீசாகிறது. அழகான இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ இதோ…

More in Cinema News

To Top