Connect with us

இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அருண்ராஜா காமராஜ்….

Cinema News

இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அருண்ராஜா காமராஜ்….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல இளம் இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் அருண்ராஜா இவர்.

கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன்,ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

கபாலி திரைப்படத்திற்காக இவர் எழுதிய நெருப்புடா பாடல் ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. ராஜா ராணி படத்தின் மூலம் ஒரு நடிகனாக காமெடி நடிகராக காலம் இறங்கினார். மான் கராத்தே படத்தில் நெருப்பு குமார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் அது அவரை நல்ல மக்களின் மனதுக்கு கொண்டு சென்றது.

இதையடுத்து, ஆர்டிகள் 15 படத்தை தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்.உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவர் இயக்கத்தில் வெளியான கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்து இருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரின் திடீர் மறைவுகஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தற்போது அருண்ராஜா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 28 ஆம் தேதி இவரின் திருமணம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அருண்ராஜா காமராஜ் விரைவில் வெளியிடுவார் என்றும் தகவல் வந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top