Celebrities
புதிய படத்தில் பிரபல நடிகைக்கு வில்லனாகும் ஆரி..! இணையத்தில் வெளியான டக்கர் தகவல்…
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை ஹன்சிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே மகா படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் போஸ்டரும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமல்லாமல் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 4 படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இன்னொரு புதிய படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார் ஹன்சிகா . இதுவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் உருவாக உள்ளது . இகோர் என்றார் இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார் .

மேலும் இப்படத்தில் ஹன்சிகாவுக்கு வில்லனாக ஆரி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரி ஏற்கனவே ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் .

குறிப்பாக சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார் . இந்நிலையில் வில்லன் கதாபாத்திரத்திற்கு மாறும் கதாநாயகர்கள் பட்டியலில் தற்போது ஆரியும் இணைந்துள்ளார்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
