Connect with us

‘காதலுக்கு மரியாதை’ – வம்புக்கு இழுத்த கஸ்தூரியை காலி செய்த ஏ.ஆர். ரஹ்மான்!

Cinema News

‘காதலுக்கு மரியாதை’ – வம்புக்கு இழுத்த கஸ்தூரியை காலி செய்த ஏ.ஆர். ரஹ்மான்!

தனது மனைவியை வம்புக்கு இழுத்த நடிகை கஸ்தூரிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒற்றை ட்வீட் மூலம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

ரோஜா படத்தில் அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றவர். அதுவரை இளையராஜாதான் தமிழ் இசையின் அடையாளம் என்று இருந்த சூழலை ஏ.ஆர்.ரஹ்மான் தகர்த்தெறிந்தார். அதன் பிறகு 90களில் தமிழ் சினிமாவில் அவரது இசை நிகழ்த்திய மாயாஜாலம் ஏராளம். ரஹ்மானின் கைகள் கீபோர்டை தொட்டால் அது ஹிட்டான மெட்டு என்ற சூழலே 90ஸ் கிட்ஸ் மனநிலையில் நிலவியது.

கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற ரஹ்மான் அங்கிருந்து ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் ஹாலிவுட் சென்றார். இந்தியாவில் தான் இசையமைத்த முதல் படத்தில் தேசிய விருது வென்றது போல் ஹாலிவுட்டுக்கு சென்ற முதல் படத்திலேயே கோல்டன் குளோப் விருதையும் இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளி வந்தார். அந்த மேடையிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம் சமீபத்தில் வெளியானது. சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் க்ளாசிக் கூட்டணியாக உருவான கிருஷ்ணா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான இரண்டாவது படம் இது. பத்து தல கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பாடல்கள் ஹிட்டடித்தன.

தமிழர்கள் பலரின் கனவு படமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. அதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டடித்தது. பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக அமைந்தது.

குறிப்பாக படத்தின் பின்னணி இசைக்கு பழங்கால கருவிகளை ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியிருந்தார். இந்தச் சூழலில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது. இதிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருந்துவருகின்றனர்.

சமீபத்தில் தனியார் ஊடகத்தின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றார். ரஹ்மான் விருதை பெற்றுக்கொண்ட பிறகு அவரது மனைவி சாயிரா பானுவும் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அவர் பேச ஆரம்பிக்கையில், ஹிந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்க ப்ளீஸ் என ரஹ்மான் கூறிய வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது.

இந்தச் சூழலில் நடிகை கஸ்தூரி, “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க” என கேள்வி எழுப்பியிருந்தார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. கஸ்தூரி அவ்வாறு ட்வீட் செய்ததை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவந்தனர். இப்படிப்பட்ட சூழலில், கஸ்தூரியின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், “காதலுக்கு மரியாதை” என குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரஹ்மானின் ரசிகர்கள் , இசைப்புயல் ஒற்றை வார்த்தையில் கஸ்தூரியை காலி செய்துவிட்டார் என கூறி அந்த ட்விட்டை வைரலாக்கியுள்ளனர்.

See also  "முதல் நீ முடிவும் நீ நடிகர் கிஷன் தாஸின் அடுத்த படம் 'தருணம்'! ஹீரோயின் யார் தெரியுமா?!"

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top