Connect with us

சந்திரமுகியாக அனுஷ்கா தான் நடிக்கிறாரா? சந்திரமுகி 2 குறித்து இயக்குனரின் அதிரடியான விளக்கம்

Cinema News

சந்திரமுகியாக அனுஷ்கா தான் நடிக்கிறாரா? சந்திரமுகி 2 குறித்து இயக்குனரின் அதிரடியான விளக்கம்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படம் சந்திரமுகி.திரையரங்கில் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி, தமிழ் சினிமாவில் மாபெரும் புதிய சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்ற பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்தது.

இப்படத்தையும் பி.வாசு தான் இயக்குகிறார். ஆனால், இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.இந்நிலையில் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்புகள் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல், சந்திரமுகி 2வில் கதாநாயகியாக நடிக்க பல நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது அனுஷ்காவை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.எனினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில்,இதுகுறித்து இயக்குனர் பி.வாசு அதிரடியாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது : ” ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அனுஷ்கா மட்டுமின்றி இன்னும் சில முன்னணி நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

சந்திரமுகியாக அனுஷ்கா தான் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகை நடிக்க உள்ளாரா? என்பது குறித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் முடிவெடுக்கப்படும் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

More in Cinema News

To Top