Connect with us

நடிகை அனுபமா பகிர்ந்த வாழ்க்கைத் தத்துவம்.. இது தான் எல்லாரும் செய்யனும்!!

Cinema News

நடிகை அனுபமா பகிர்ந்த வாழ்க்கைத் தத்துவம்.. இது தான் எல்லாரும் செய்யனும்!!

தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து அதர்வாவுடன் தள்ளிப்போகாதே படத்தில் நடித்து இருந்தார். தற்போது சைரன் படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டியில்,மனதுக்கு வருத்தமளிக்கும் விஷயங்களாக இருந்தாலும் மனதுக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தாலும் முடிந்த அளவுக்கு விரைவாக அதை மறந்து விட முயற்சி செய்வேன்.

நான் மிகவும் நேர்மையாக இருப்பேன். எனக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அந்த இடத்திலேயே அவர்கள் முகத்தின் மீதே சொல்லி விடுவேன். அதன் பிறகு அந்த விஷயத்தை அங்கேயே விட்டு விடுவேன்.

ஏனென்றால் வாழ்க்கை மிகவும் சிறியது.கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இந்த உலகத்தில் நாம் இருக்க மாட்டோம். அந்த நாள் எப்போது வரும் என்பது கூட யாருக்கும் தெரியாது. எனவே வாழும் நாட்கள் எல்லாம் நெருக்கடியை, வேதனையை மனதில் அடைத்துக் கொண்டு நமது சக்தியை எதற்கு வீணாக செலவு செய்ய வேண்டும்..

கண்காணிப்பு கேமராவில் இருக்கும் காட்சிகள் ஒரு மாதத்திற்கு பிறகு ஆட்டோமேட்டிக்காக எப்படி டெலிட் ஆகிவிடுகின்றனவோ என் மனதை கூட அப்படி வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன்.இதுதான் என் வாழ்க்கைத் தத்துவம் என்றார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "KH 234 படத்தின் Shooting எப்போது? இதுதான் காரணமா?!"

More in Cinema News

To Top