அண்ணாத்த ஷூட்டிங்கின் போது செல்லமாக போட்டோ எடுத்த அவரை நண்பரின் மகள் ..!வைரலாகும் போட்டோ

0
28

கொரோனவால் படப்பிடிப்பு ரத்தாகி மீண்டு மீண்டு நடந்த ஷூட்டிங் என்றால் அது ரஜினி நடித்துவரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். நயன்தாரா ரஜினியின் ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.மேலும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை நேற்று முடித்துவிட்டு ரஜினி அவர்கள் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் மகள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.ரஜினியை படக்குழுவினர் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்தாலும் நெருங்கிய நண்பரின் மகள் என்பதால் மட்டும் லட்சுமி மஞ்சுவை மட்டும் அவர்கள் அனுமதித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.