Connect with us

அண்ணாத்த படம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதா..?சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமையா..?

Cinema News

அண்ணாத்த படம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதா..?சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலைமையா..?

சூப்பர் ஸ்டார் ரஜினி,மீனா,குஷ்பூ மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தான் அண்ணாத்த.இயக்குனர் சிவா இயக்கத்தில் ரசிகர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.படத்தின் மோஷன் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,படத்திலிருந்து அண்மையில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் & செகண்ட் சிங்கள் பாடல் வெளியானது.

அதாவது ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரா காற்றே’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் டீசர் வரும் 10 நாட்களுக்குள் வெளியாக இருப்பதாகவும், படக்குழு ஆயுதபூஜை விடுமுறை தினங்களில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

annathae hashtag on Twitter

மேலும் அக்டோபர் 14 ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அண்ணாத்த படத்தில் டீசர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் ரூ.14 கோடி விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினியின் முந்திய திரைப்படமான தர்பார் இதை விட அதிக விலைக்கு விற்கப்பட்டது. இப்படி சூப்பர்ஸ்டாரின் படமே குறைந்த விலைக்கு விற்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

More in Cinema News

To Top