Connect with us

அட என்னப்பா இது அண்ணாத்த படத்துக்கு வந்த சோதனை..! அண்ணாத்த படம் குறித்த நியூ அப்டேட்…

Cinema News

அட என்னப்பா இது அண்ணாத்த படத்துக்கு வந்த சோதனை..! அண்ணாத்த படம் குறித்த நியூ அப்டேட்…

தமிழ் திரை உலகில் அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் வாழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் இருந்து ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரா காற்றே’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அக்டோபர் 14 ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அண்ணாத்த படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் தெலுங்கு திரையரங்கு ரைட்ஸ் ரூ.14 கோடி விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் முந்திய திரைப்படமான தர்பார் இதை விட அதிக விலைக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

More in Cinema News

To Top