Connect with us

யார் மறந்தாலும் 90s கிட்ஸ் நாங்க உங்கள மறக்கமாட்டோம் சார்..! மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு தினத்தையொட்டி அண்ணாத்த படக்குழு எடுத்த முக்கிய முடிவு..!

Cinema News

யார் மறந்தாலும் 90s கிட்ஸ் நாங்க உங்கள மறக்கமாட்டோம் சார்..! மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு தினத்தையொட்டி அண்ணாத்த படக்குழு எடுத்த முக்கிய முடிவு..!

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறப்பதற்குமுன் கடைசியாக ‘அண்ணாத்த’ படத்தில் பாடிய பாடலை அவரது நினைவு தினத்தையொட்டி படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி உயிரிழந்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறப்பதற்குமுன் கடைசியாக ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில்தான் பாடல் பாடியிருந்தார். இதனை, இசையமைப்பாளர் இமான் ‘கடைசிப்பாடலை ‘அண்ணாத்த’ படத்திற்காக எனது இசையில் எஸ்.பி.பி பாடியது ஆசிர்வாதம்’ என்று குறிப்பிட்டார்.

Hamsalekha Studio | Digital Recording Studio - YouTube

இந்நிலையில், வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி எஸ்.பி.பி நினைவு தினத்தையொட்டி ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. ரஜினிக்கு வழக்கம் போல் ஓப்பனிங் பாடலை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

எஸ்.பி.பி கடைசியாக ரஜினிக்கு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தர்பார்’ படத்தில் ‘சும்மா கிழி’ பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top