Connect with us

கோபத்தில் தங்கைகள்.. பனைமரத்தில் இருந்து வழுக்கி விழுந்த ஷண்முகம்

Cinema News

கோபத்தில் தங்கைகள்.. பனைமரத்தில் இருந்து வழுக்கி விழுந்த ஷண்முகம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் சினிமாவிற்கு போய்ட்டு வந்த தங்கைகள் நாலு பேரும் ஷண்முகத்திடம் மாட்டி கொண்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது ஷண்முகம் கோபத்தோடு பார்க்க செல்லக்கனி பிரம்பு ஒன்றை எடுத்து கொடுத்து எங்களை அடி அண்ணா என்று சொல்ல ஷண்முகம் தங்கைகளை அடிக்காமல் தன்னை தானே அடித்து கொள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு உன்னை எதுக்கு அண்ணே அடிச்சிக்குற என்று கேட்க வளர்ப்பு சரியில்லைலே அதான் என்னையே அடிசிக்குறேன் என்று சொல்கிறான்.

மேலும் நம்ம அம்மாவால் ஏற்கனவே நம்ம குடும்பத்தை பத்தி எல்லாரும் தப்பா சொல்றாங்க, அதை மாத்துறதுக்கே 1 ஜென்மம் முழுக்க ஒழுக்கமா இருக்கணும், அப்படி இருக்கும் போது நீங்களே ஊர் வாய்க்கு அவல் போடுற மாதிரி நடந்துக்கிட்டா சரியா இருக்குமா என்று கோபப்படுகிறான். தியேட்டரில் ஒருத்தன் இந்த பொண்ணுங்க ஆட்டம் தான் பயங்கரமாக இருக்கு என்று பேசுறான், எவ்வளவு அசிங்கமாக இருந்துச்சு தெரியுமானு ஆவேசப்படுகிறான்.

மறுநாள் காலையில் தங்கைகள் எல்லாம் கோபமாக இருக்க இசக்கி மட்டும் வீட்டு வேலைகளை பார்த்து கொண்டிருக்க ஷண்முகம் தனது தோட்டத்தில் பனைமரம் ஏற அதற்கான பொருட்களை எடுத்து கொண்டு கிளம்புகிறான். தங்கைகள் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ஷண்முகம் பேச மாட்டிங்களா என ஒவ்வொருத்தரிடமும் கேட்கிறான்.

எல்லாரும் அமைதியாக இருக்க இசக்கி மட்டும் நீச்சத்தண்ணி எடுத்து கொடுத்து அவளும் பேசாமல் கோபமாகவே இருக்க ஷண்முகம் பேசலானா போங்கலே, ஒரு நாள் இந்த அண்ணன் இல்லாமல் போன பிறகு என்னுடைய அருமை உங்களுக்கு தெரியும் என சொல்ல அப்பா வைகுண்டம் பொண்ணுகளிடம் அண்ணனிடம் பேச சொல்ல யாரும் பேசாமல் இருக்கின்றனர். இதனால் ஷண்முகம் வருத்தத்தோடு தோட்டத்துக்கு கிளம்பி செல்கிறான்.

அவன் பனை மரத்தில் ஏற அங்கு அவனுடைய மாமாவும் தமிழரிசியின் அப்பாவுமான தங்கவேலு வந்து நீயே எதுக்கு டா ஏறுற? ஆள் வைக்க வேண்டியது தானே என்று சொல்ல அவனுக்கு யாரு பணம் கொடுப்பான்? இப்படியெல்லாம் தங்கச்சிகளுக்கு சேர்த்து வைத்தால் தான் உண்டு என தங்கைகளின் மீதான பாசம் பற்றி பேசி கொண்டே ஏற ஒரு கட்டத்தில் வழுக்கி கீழே விழுகிறான்.

மறுபக்கம் தங்கச்சிங்க நாலு பேரும் அண்ணா ரொம்ப பண்ணுது, அன்பை காட்டி எல்லாரையும் கட்டுப்படுத்தணும்னு நினைக்குது, இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கல என பேசி கொண்டிருக்க அப்போது ஒரு பெண்மணி வந்து பனைமரத்தில் இருந்து ஷண்முகம் கீழே விழுந்த விசயத்தை சொல்ல எல்லாரும் பதறியடித்து ஓடி வர தெருமுனையில் வந்து அவர்களின் முகம் திடீரென மாறுகிறது. இதற்கான காரணம் என்ன? அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

See also  "IND v AUS: 3rd ODI - வரலாற்று சாதனை படைக்குமா ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி?!"

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top