Connect with us

குக் வித் கோமாளி அம்மு அபிராமி நடித்த ‘பேட்டரி’ பட ட்ரைலர் வெளியீடு!

Cinema News

குக் வித் கோமாளி அம்மு அபிராமி நடித்த ‘பேட்டரி’ பட ட்ரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை அம்மு அபிராமி, பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். குறிப்பாக தீரன் அதிகாரம் ஒன்று , ராட்சசன் , அசுரன் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து கவனம் பெற்றார்.

மேலும், அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இதற்கிடையில் மணிபாரதி இயக்கத்தில் அம்மு அபிராமி நடித்துள்ள பேட்டரி படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்கும் பேட்டரி திரைப்படத்தில் தீபக் செட்டி, M.S.பாஸ்கர், யோக் ஜபீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். K.G.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் பேட்டரி திரைப்படத்திற்கு ராஜேஷ்குமார் படத்தொகுப்பு செய்ய, ஹரி தினேஷ் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் பேட்டரி திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அம்மு அபிராமியின் பேட்டரி திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் சற்று முன்பு வெளியானது. சமூகவலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள பேட்டரி திரைப்படத்தின் ட்ரைலர் இதோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top