Connect with us

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் எப்படி இருக்கு..?முதல் விமர்சனம்! வைரலாகும் பதிவு!

Cinema News

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் எப்படி இருக்கு..?முதல் விமர்சனம்! வைரலாகும் பதிவு!

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சுகுமாரின் புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 2021 டிசம்பர் 17 ஆம் தேதி பெரிய திரைக்கு வர உள்ளது. இப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு இருந்தாலும், இது தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் .

Doing Pushpa was equivalent to doing four films, says Allu Arjun -  Hindustan Times

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து, இதுவரை வெளியான அனைத்து பாடல்களுக்கும் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சமீபத்தில் சமந்தா ஆடிய ஐட்டம் பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் சில விமர்சனங்களை பெற்றாலும், ரசிக்க வைத்துள்ளது.

Samantha Ruth Prabhu sizzles in first look of Pushpa The Rise special song  | Entertainment News,The Indian Express

இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் இன்னும் பெரிய திரையில் படத்தை பார்க்காத நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து படத்தின் முதல் விமர்சனம் இப்போது வெளிவந்துள்ளது. வெளிநாட்டு தணிக்கைக் குழுவில் உறுப்பினராக உள்ள உமைர் சந்து, படத்தைப் பார்த்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். படத்தின் முதல் பாதி விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Pushpa: The Rise LIVE UPDATES: Allu Arjun, Rashmika Mandanna promote the  film in Mumbai | PINKVILLA

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பு வேற லெவலில் இருப்பதாகவும், மிகவும் விறுவிறுப்பான கதை களம், மாஸ் ஆக்ஷன் காட்சிகள், சமந்தாவின் ஐட்டம் பாடல், என அனைத்தும் அருமையாக இருப்பதாக கூறி நான்கு ஸ்டார் இப்படத்திற்கு கொடுத்துள்ளார். இவரது இந்த விமர்சனம் இப்படத்தை பார்க்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

மேலும் சம்மந்தத்தில் கூட நடிகை ராஷ்மிக்கா பத்திரிகையாளர் சந்திப்பில் கூட சமீபத்தில், அல்லு அர்ஜுனுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார், “அதில் தனக்கும் ,அல்லு அர்ஜுனாவுக்கும் கெமிஸ்ட்ரி திரையில் நன்றாக வேலை செய்யும் என்று நான் நம்புகிறேன். அவருடன் இன்னும் 100 படங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in Cinema News

To Top