Celebrities
மக்களே AK 61 படத்தின் டைட்டில் இதுதான்..? வெளியான டக்கர் தகவல்…
தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்களில் உச்சத்தின் உச்சியில் இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இதே கூட்டணியில் அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் மின்னல் வேகத்தில் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் படத்தின் கொடூர வில்லனாக ஜான் கொக்கன் நடித்து வருவதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் இந்த படத்திற்கு ரஜினி படத்தின் டைட்டில் வீரா என்பதை தேர்வு செய்திருப்பதாக ஒரு மாஸான தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ரஜினி மற்றும் அஜித்தின் ரசிகர்கள் செம ஹாப்பியாக உள்ளனர் மேலும் இப்படத்தின் கதை எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
