Connect with us

“விடாமுயற்சி படத்தில் இவரும் உண்டா…?லியோ படத்தை மிஞ்சிவிடும் போலயே..”

Cinema News

“விடாமுயற்சி படத்தில் இவரும் உண்டா…?லியோ படத்தை மிஞ்சிவிடும் போலயே..”

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்…இப்படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்கிறது…விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது..

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் ஆரம்பம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது அதனை போல அடுத்தடுத்த அப்டேட் வரும் வாரங்களில் வரும் எனவும் சொல்லப்படுகிறது இப்படி விறுவிறுப்பான பணிகள் துவங்க உள்ள நிலையில் படத்தில் இருந்து நிறைய புகைப்படங்கள் வந்து கொண்டுள்ளது..

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா,சஞ்சய் தத்,அர்ஜுன்,அர்ஜுன் தாஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது…விடாமுயற்சியின் முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது….

இதற்காக தான் அஜித் தற்போது துபாய் சென்றுள்ளார் அங்கு பலரும் எதிர்பார்த்தது போல ஒரு சில புகைப்படங்கள் வந்து கொண்டு உள்ளது.இந்நிலையில் துபாயில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை நேரில் அவருடைய வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார் அந்த புகைப்படம் கூட சமீபத்தில் வந்தது…அங்கு நீண்ட நேரம் தங்கி தங்களுடைய படங்கள் பற்றி பேசியிருந்தனராம்..

இப்போது அடுத்ததாக அங்கு சஞ்சய் தத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் ஒரு வேல மிகவும் பெரிய கேமியோ ரோல்லா இல்லை வில்லன் கதாபாத்திரமா என பேசிக்கொண்டு உள்ளனர்..இப்படி செம அப்டேட் வந்து கொண்டு உள்ளது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரசிகர்களுக்கு மொத்தமாக சோகத்தை கொடுத்த லியோ படக்குழு..Audio Launch ரத்து!

More in Cinema News

To Top