Connect with us

அஜித்தின் வலிமை படத்தின் கதை இது தான்..!ரசிகர்கள் எதிர்பாக்குற மாதிரி இருக்காது..?

Cinema News

அஜித்தின் வலிமை படத்தின் கதை இது தான்..!ரசிகர்கள் எதிர்பாக்குற மாதிரி இருக்காது..?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘வலிமை’ திரைப்படம் 2022 பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே ‘நாங்க வேற மாறி’ என்ற பர்ஸ்ட் சிங்கிளும், ‘மதர் சாங் ‘ இரண்டாவது சிங்கிளும் வெளியாகிவிட்ட நிலையில், லேட்டஸ்ட் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் டிசம்பர் 19, 2021 அன்று வெளியாகலாம் என்பது போல இருந்த நிலையில் சில தவிர்க்கமுடியாத காரணத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது.

Valimai gears up for third single release! Tamil Movie, Music Reviews and  News

அஜித்தின் ‘வலிமை’ படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்த போனி கபூர் தயாரித்துள்ளார். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, ராஜ் அய்யப்பா, யோகி பாபு, குர்பானி, புகழ், அச்யுத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இதுவரை இந்த பொங்கலுக்கு தனியாக தமிழில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை அல்ல தயாராகி வரும் இப்படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் எச்.வினோத் நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘வலிமை’ பற்றி சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார் ,அதில் வலிமை பட கதை பற்றி அவர் தெரிவித்து இருந்ததாவது, நம்பிக்கைக்கு மாறாக பைக்குகள் முக்கியமாக இடம்பெற்றாலும் கதை பைக்கர் கும்பலைப் பற்றியது அல்ல என்று பகிர்ந்துள்ளார். மறுபுறம், படத்தின் முக்கிய பிரச்சினை போதை மருந்து மாஃபியா மற்றும் போலீசாக நடித்த அஜித் அந்த கும்பலை எப்படி பிடிக்கிறார் என்பதே படத்தின் சுருக்க கதை.மேலும் வலிமை படத்தின் மூன்றாவது சிங்கிள் எப்ப ரிலீசாகும் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர் .

More in Cinema News

To Top