Connect with us

அக்டோபரில் தொடங்கும் தல,தளபதி படங்கள்…மீண்டும் போட்டிக்கு ரெடி போல!

Cinema News

அக்டோபரில் தொடங்கும் தல,தளபதி படங்கள்…மீண்டும் போட்டிக்கு ரெடி போல!

தமிழில் போட்டி நாயகர்களாக இருக்கும் விஜய் அஜித் படங்கள் அப்டேட் பாப்போம்,அதாவது விஜய் 68 மற்றும் அஜித்தின் விடாமுயற்சி ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இது வைரல் ஆகி வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய் ‘வாரிசு’, அஜித் ‘துணிவு’ என இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் படங்களை வெளியிட்டனர்…அடுத்தடுத்த படங்களுக்கு இருவரும் தயாரான நிலையில்,விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தை முடித்து அடுத்த படத்துக்கே தயாராகிவிட்டார்.‘லியோ’ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அஜித் அவர்களை பொறுத்தவரை ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அவரது அடுத்த படத்துக்கான நகர்வு ரொம்பவும் பொறுமையாக இருக்கிறது…தன்னுடைய பைக் டூர் பயணத்தை முடித்து வந்த அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்கு தயாராகியுள்ளார்.

இந்நிலையில் இருவரின் படங்களும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதுவும் ஒரு செம Clash என சொல்லப்பட்டு வருகிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது…

அதனை போல மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு துபாயில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…அதனை ஒரே நேரத்தில் இரு படமும் வெளியாகலாம் என்ற தகவலும் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆய்ட்டாரே : மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் வீடியோ வெளியானது..!!

More in Cinema News

To Top