Cinema News
AK61 படத்திலிருந்து லீக்கான சூட்டிங் ஸ்பாட் வீடியோ…அதிர்ச்சியில் படக்குழு
இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத்-அஜித் கூட்டணி #AK61 படத்தில் 3வது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. #AK61 திரைப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் #AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக முதல்முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளார்.

இப்படம், வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகிவருகிறது. கல்லூரி பேராசிரியராக அஜித் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம். வித்யாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் லுக்குடன் அஜித் இப்படத்தில் தோன்றவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது.இப்படத்தின் லுக்குடன் அஜித் தோன்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வெளியான வண்ணம் உள்ள்ன. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவே தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
#AK61 shooting spot
— Manibharathi AK61 (@AlwaysAKFans) July 26, 2022
YOUR BANK 🥵@BoneyKapoor #HVinoth #AK61 pic.twitter.com/UN4VGnCwZf
வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் படம் எனும் காரணத்துக்காக பிரபல வங்கி ஒன்று செட் போட்டு படக்குழு படமாக்கிவந்தது. அந்த செட் பற்றிய வீடியோதான் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.இப்படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
