Connect with us

“அடுத்த படத்திற்கு தயாராகும் சீயான் விக்ரம்! படத்தின் இயக்குனர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!”

Cinema News

“அடுத்த படத்திற்கு தயாராகும் சீயான் விக்ரம்! படத்தின் இயக்குனர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!”

விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் நீண்ட நாளாக கிடப்பில் இருந்தது. இதன்பின் சமீபத்தில் தான் இந்த படம் தொடங்கப்பட்டு தற்போது ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது என்பது இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’துருவ நட்சத்திரம்’ படத்தை அடுத்து இன்னொரு விக்ரம் படமும் தற்போது விமோசனம் பெற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ஆர்எஸ் விமல் இயக்கத்தில் ’மகாவீர் கர்ணா’ என்ற திரைப்படம் . உருவாக இருந்தது. இந்த படத்தின் பூஜை பிரம்மாண்டமாக திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோயிலில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படம் டிராப் என கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆர்எஸ் விமல் தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் ’மகாவீர் கர்ணா’ படத்தின் வேலைகளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இன்னொரு விக்ரம் படத்திற்கு விமோசனம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 32 மொழிகளில் இந்த படத்தை உருவாக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "காற்றிலே பறந்து கழுதை உதைப்பீர்களே..! கேப்டன் விஜயகாந்த் குறித்து உருக்கமான அறிக்கை வெளியிட்ட நடிகர் மன்சூர் அலிகான்!"

More in Cinema News

To Top