Connect with us

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்..!

Featured

ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்..!

ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிகை நட்சத்திரமாக வலம் வரும் சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக விளையாடி தொடரை அசால்டாக வென்றது. இந்த தொடரில் அனைவரையும் கவரும்படி சிறப்பாக செயல்பட்ட சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் , ஹசரங்காவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு கெத்தாக முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை வீரர் ஹசரங்கா 2வது இடத்திலும் , ஆப்கானிஸ்தான் அணியின் பசல்ஹக் பரூக்கி 3வது இடத்தில் உள்ளார்.

இதில் சற்று வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த தரவரிசையில் இந்திய வீரர்ககள் யாரும் டாப் 10 இடத்திற்குள் இல்லை என்பது தான் . இந்திய அணியின் அர்ஷிதீப் சிங் 14 வது இடம் , புவனேஷ்வர் குமார் 20 இடத்தில் உள்ளனர்.

இளம் வயதில் தனது அணிக்காக பல சாதனைகளை நிகழ்த்திய ரஷித் கான் மேலும் பல சாதனைகளை படைக்க முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "இந்திய சினிமாவின் அடையாளம்! Happy Birthday Director Mani Ratnam Sir!"

More in Featured

To Top