Connect with us

இது என்ன புதுவித உருட்டா இருக்கு..கவர்ச்சி நடிகையை கடவுளாக வழிபட்ட தீவிர ரசிகர்..! மிரண்டு போய் யாஷிகா கொடுத்த அட்வைஸ்..

Cinema News

இது என்ன புதுவித உருட்டா இருக்கு..கவர்ச்சி நடிகையை கடவுளாக வழிபட்ட தீவிர ரசிகர்..! மிரண்டு போய் யாஷிகா கொடுத்த அட்வைஸ்..

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த வருடம் இவருக்கு நேர்ந்த கோர கார் விபத்தில் இருந்து போராடி மீண்டு வந்த பிறகு இவர் புது யாஷிகாவாக மாறியுள்ளதாக இணைய வாசிகள் கமெண்ட்ஸ் மூலம் கூறி வருகின்றனர் .

அதனை உறுதி செய்யும் வகையில் விபத்துக்கு பின் இவர் நிறைய போட்டோஷூட்டுகளை நடத்தி வருகிறார் . அந்த புகைப்படங்களும் இணையத்தில் நல்ல ரிச் ஆகிறது . இதுமட்டுமல்லாமல் அவர் தற்போது பல மொழி படங்களில் நடித்தும் வருகிறார் .

திரையுலகில் திறமையை காட்டினாலும் யாஷிகா நடிப்பிற்கு கிடைத்த ரசிகரை விட அவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் தான் அதிகம்.

அந்தவகையில் யாஷிகாவின் தீவிர ரசிகர் ஒருவர், யாஷிகாவின் புகைப்படத்தை எடுத்து வைத்து அவரை சாமியாக பாவித்து தினமும் வழிபட்டு வந்துள்ளார் . அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த யாஷிகா, ‘நானும் மனுஷன் தானே. நாம் எல்லாரும் அன்பை பகிருவோம். நமக்கெல்லாம் ஒரு கடவுள் தான் இருக்கிறார். நாம் அவரை மட்டும் தான் பயபக்தியுடன் வழிபட வேண்டும்’ என்று அந்த ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

ரசிகரின் அந்த செயலுக்கு பலரும் பல விதமாக கமன்ட் செய்து வருகின்றனர் . இந்த வினோத ரசிகரை பார்த்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது கமெண்ட்ஸ் மூலம் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top