Connect with us

“வைரலாக பரவிவரும் நடிகை த்ரிஷாவின் தளபதி 67 பூஜை Saree Photos!”

Cinema News

“வைரலாக பரவிவரும் நடிகை த்ரிஷாவின் தளபதி 67 பூஜை Saree Photos!”

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தின் பூஜைக்கு சேலை அணிந்து வந்த நடிகை திரிஷாவின் கியூட் போட்டோஸ் வைரலாகி வருகிறது. நடிகை திரிஷாவுக்கு 2022-ம் ஆண்டு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான். மணிரத்னம் இயக்கிய அப்படத்தில் குந்தவை என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் அழகிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் திரிஷா நடித்த ராங்கி திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார் திரிஷா. இப்படத்துக்கு பின்னர் திரிஷா நடிக்க கமிட் ஆன திரைப்படம் தான் தளபதி 67.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. ஏற்கனவே கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த திரிஷா, தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடன் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு வேறலெவலில் எகிறி உள்ளது.

தளபதி 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் நடந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றனர். நடிகை திரிஷாவும் அவர்களுடன் சென்றிருந்தார். அங்கு இரண்டு மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த உள்ளனர்.

இதனிடையே தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டு வைரல் ஆன நிலையில், அந்த பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் சேலையில், அழகு தேவதையாக மிளிரும் திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top