Connect with us

காதலருடன் கடற்கரையில்.. கனவை நனவாக்கிய நடிகை பிரியா பவானி சங்கர்..!!

Cinema News

காதலருடன் கடற்கரையில்.. கனவை நனவாக்கிய நடிகை பிரியா பவானி சங்கர்..!!

தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

செய்தி ஊடகத்தில் ஒரு செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கிய பிரியா பவானி சங்கர், பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தார்.

இதையடுத்து வெள்ளித் திரைக்கு சென்ற பிரியா பவானி சங்கர், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், யானை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இந்தியன் 2, பொம்மை, அகிலன், ருத்ரன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் பிரியா பவானி சங்கர், “எங்களுக்கு 18 வயது இருக்கும்போது கடற்கரையில் இருப்பது மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அப்போது நிலாவை பார்த்துக் கொண்டே இங்கே ஒரு வீடு கட்ட வேண்டும் என்று இருவரும் கனவு கண்டோம். இப்போது அந்த கனவு நனவாகி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், கனவை நனவாக்கிய ஜோடிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top