Celebrities
திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்..! மாப்பிள்ளை யார் தெரியுமா..?
இந்திய திரையுலகில் இருக்கும் பல முன்ணனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் இவர் தற்போது நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கிறது .
தெலுங்கில் ‘மகாநடி’ என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார் .

கடைசியாக மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியதாகவும் , விரைவில் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என்றும், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் விரைவில் திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
