Connect with us

ஹன்சிகாவுக்கு திருமணம் இந்த தேதியில் தான்.. வெளியானது தகவல்..!!

Cinema News

ஹன்சிகாவுக்கு திருமணம் இந்த தேதியில் தான்.. வெளியானது தகவல்..!!

தொழிலதிபரான தனது நெருங்கிய நண்பரை நடிகை ஹன்சிகா திருமணம் செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரின் திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக இந்தி சினிமாவில் ஹன்சிகா அறிமுகம் ஆகியிருந்த ஹன்சிகா, சில வருடங்களுக்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய், ஜெயம் ரவி, சிம்பு, சூர்யா, ஜீவா, விஷால், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்த ஹன்சிகா, ஒட்டுமொத்தமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சில காலமாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த அவர், தற்போது தமிழில் 4 படம், தெலுங்கில் 2 படம் என பிசியாக உள்ளார்.

இந்தநிலையில் திடீரென ஹன்சிகாவுக்கு தொழிலதிபருடன் திருமணம் உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவியது. மாப்பிள்ளை யார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் காட்டி வந்த நிலையில், அவர் யார் என்ற விபரமும் தற்போது வெளியாகியுள்ளது.

ஹன்சிகாவை திருமணம் செய்யப் போகிறவர் அவரது நீண்ட நாள் பிஸ்னஸ் பார்ட்னரும் நண்பருமான சொஹைல் கதூரியா தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி நடக்க உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த திருமணம் ராஜஸ்தானின் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ள நிலையில், இதற்காக 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தயாராகி வருகிறது.

இதற்கிடையே திருமணத்திற்கு பின்னரும் ஹன்சிகா தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தென்னிந்திய படங்களில் சிலவற்றில் ஏற்கனவே ஹன்சிகா புதிதாக கமிட் ஆகியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "போயஸ் கார்டன் தலைவர் ரஜினிகாந்த் வீட்டுக்குள் புகுந்த மழைநீர்?! வைரலாகிவரும் வீடியோ!"

More in Cinema News

To Top