Connect with us

Viral: பேருந்தில் இளைஞர் சுய இன்பம் – வீடியோ எடுத்து போலீஸில் ஒப்படைத்த நடிகை!

Featured

Viral: பேருந்தில் இளைஞர் சுய இன்பம் – வீடியோ எடுத்து போலீஸில் ஒப்படைத்த நடிகை!

திருச்சூரிலிருந்து கொச்சி செல்வதற்காக நடிகையும் மாடலுமான நந்திதா சங்கார என்பவர் அரசு பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அவரது அருகே சவாத் ஷா என அறியப்படும் இளைஞர் அமர்ந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞரின் கை தனது மேல் படுவதை உணர்ந்த நந்திதா, அவர் சுய இன்பம் செய்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனையடுத்து நந்திதா தனது போனில் அவரை வீடியோ எடுக்கத் தொடங்கியிருக்கிறார். இதனால் உஷாரான அந்த இளைஞர் தன் பேண்ட் ஜிப்பை மூடியிருக்கிறார்.

இதுதொடர்பாக நந்திதா அந்த இளைஞர் குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் புகார் அளித்திருக்கிறார். ஓட்டுநரும் நடத்துநரும் அவரை விசாரித்தபோது தன் தவறை அந்த இளைஞர் ஒப்புக்கொள்ளாமல் அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றிருக்கிறார்.

அவரை துரத்திப்பிடித்த ஓட்டுநரும் நடத்துநரும் இளைஞரை நெடும்பசேரி என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸார் அந்த இளைஞரிடம் விசாரித்ததில் அந்தப் பெண் அழகாக இருந்ததால் அவ்வாறு நடந்துகொண்டதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து நடிகை நந்திதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அவரது வீடியோவில் நடந்த சம்பவம் தொடர்பாக தன் நண்பரிடம் தெரிவித்ததாகவும், அவர் தான் தைரியமாக வீடியோ எடு என்று சொன்னதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். நந்திதாவின் நடவடிக்கைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரகுல் ப்ரீத் சிங்கின் அசத்தலான Glamour போட்டோஸ்!

More in Featured

To Top