Connect with us

“Modeling நாட்களில் எடுக்கப்பட்ட உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அரிய புகைப்படங்கள்!” Viral..!

Cinema News

“Modeling நாட்களில் எடுக்கப்பட்ட உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அரிய புகைப்படங்கள்!” Viral..!

உலக அழகி என்றாலே இப்போதும் நம் நினைவுக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான். 1973-ஆம் ஆண்டு கர்நாடகாவின் மங்களூரில் பிறந்த இவர், 1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை தட்டி சென்றார். தற்போது 49 வயதானாலும் கூட இன்னும் இளமை தோற்றத்தில் இருந்து ரசிகர்களை அசத்துகிறார் ஐஸ்வர்யா ராய்.

இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழில் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவர் முதன் முதலில் திரையுலகில் அறிமுகமான மொழி தமிழ் தான். இவர் 1997-ம் ஆண்டு டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் இந்திய திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார். அதன் பிறகு இந்தி படத்தில் நடித்த இவர் டைரக்டர் சங்கரின் ஜீன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் நடித்தார்.

பின் தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்து நிரந்தர அழகியாக இன்றும் இருக்கிறார். 1990-களில் மாடலிங் துறையில் இருந்த ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக இருந்ததோடு, ஸ்டைலாகவும் இருந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் மாடலிங்கில் இருந்த போது எடுக்கப்பட்ட ஓல்ட் ஃபோட்டோக்கள் இப்போது மீண்டும் ஆன்லைனில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களின் மனதில் இன்றும் உலக அழகியாக இருக்கும் ஐஸ்வர்யா ராயின் 90-களில் எடுக்கப்பட்ட சில சூப்பர் ஸ்டில்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top