Connect with us

நடிகர் விஷால் வீட்டின் மீது கல்வீச்சு..!! சிக்கிய குற்றவாளிகள்..!! தாக்குதல் காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க..!!

Actor_Vishal

Cinema News

நடிகர் விஷால் வீட்டின் மீது கல்வீச்சு..!! சிக்கிய குற்றவாளிகள்..!! தாக்குதல் காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க..!!

நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் சென்னை அண்ணா நகர் 12ஆவது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் வீட்டின் மீது கடந்த 26ம் தேதி காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கல்வீச்சு சம்பவத்தால் வீட்டின் முதல் மாடியிலிருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.

இதையடுத்து காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து கண்ணாடியை உடைத்த நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் நான்கு நபர்களை பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், நண்பர்களான அந்த நால்வரும், சம்பவத்தன்று ஒன்றாக குடித்துவிட்டு, மதுபோதையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது பின்னர் தகராறாகவும் மாறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காரைவிட்டு இறங்கிய அவர்கள் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்க ஆரம்பித்ததாகவும், அப்போது தெரியாமல் ஒரு கல் நடிகர் விஷால் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது பட்டுவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top