Connect with us

மனைவி மற்றும் நண்பர்களுடன் அட்டகாசமாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விக்ராந்த்..! இணையத்தில் உலா வரும் கலக்கல் புகைப்படங்கள் இதோ..

Celebrities

மனைவி மற்றும் நண்பர்களுடன் அட்டகாசமாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விக்ராந்த்..! இணையத்தில் உலா வரும் கலக்கல் புகைப்படங்கள் இதோ..

தமிழ் சினிமாவில் வெகு சில படங்களே நடித்திருந்தாலும் தனக்கென ஒரு நற்பெயர் சம்பாதித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ராந்த், ஆரம்பத்தில் புதுமுக நடிகராக சினிமாவில் நடித்து வந்த இவர் . தளபதி விஜய்யின் உறவினர் என்று தெரிந்தவுடன் மேலும் பிரபலமாகிவிட்டார்.

இதில் முக்கியமான மேட்டர் என்னவென்றால் நடிகர் விக்ராந்த் அதிகமாக தளபதி பெயரை பயன்படுத்தியதே கிடையாது, தனக்கு என்ன வருமோ அதை நோக்கி பயணம் செய்து வந்துள்ளார் . சின்ன சின்னதாக படங்கள் நடித்து வருவதால் தற்போது வரை பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை என்பது சற்று வருத்தத்திற்குரிய விஷயம் தான் .

கொரோனா நோய் தொற்று சங்கடங்களுக்கு பிறகு ஜீ தமிழில் சர்வைவர் என்ற ஷோ தொடங்கப்பட்டது, அதில் ஒரு போட்டியாளராக விக்ராந்த் கலந்துகொண்டார் . தற்போது அந்த நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் அனைவரும் இந்தியா திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் வீடு திரும்பிய நடிகர் விக்ராந்த் தனது பிறந்தநாளை மனைவி மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி அட்டகாசமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவர ரசிகர்களால் அதிகாவில் பகிரப்பட்டு இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More in Celebrities

To Top