Connect with us

நடிகர் விஜய் சேதுபதி உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்..!

Celebrities

நடிகர் விஜய் சேதுபதி உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்..!

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நட்சத்திரங்களில் தனக்கென தனி இடத்தை ரசிகர்கள் மனதில் கட்டமைத்து வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி .

பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் இவரது நடிப்பில் சமீபத்தில், ’லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகின. அதோடு மட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சியில் வெளியாகும் மாஸ்டர் செஃப் ஷோவிலும் இவர் பங்கேற்று வருகிறார்.

Annabelle Sethupathi review: Vijay Sethupathi and Taapsee's film evokes  laughter

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சந்தித்து உரையாடியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா’ என்று உற்சாகமுடன் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டார்.

Image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்ததையடுத்து மாநில கிரிக்கெட் அணியில் தற்போது விளையாடி வருகிறார். இந்த 7 ஆண்டுகளில் ரியாலிட்டி டான்ஸ் ஷோக்களிலிலும் இந்தி பிக்பாஸ் சீசன் 12 லும் பங்கேற்ற ஸ்ரீசாந்த் பிக்பாஸில் ரன்னராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top