Connect with us

“விஜய் ஆண்டனியின் தற்போதைய உடல்நிலை! உண்மையை உடைத்து சொன்ன இயக்குனர்!!”

Cinema News

“விஜய் ஆண்டனியின் தற்போதைய உடல்நிலை! உண்மையை உடைத்து சொன்ன இயக்குனர்!!”

விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2ம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார். முதல் பாகம் பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக அவரே இயக்கி வருகிறார்.

மலேசியாவில் இந்த படத்தின் பாடல் காட்சிக்காக அவர் கடலில் ஜெட் ஸ்கி ஓட்டி சென்றபோது அவர் விபத்தில் சிக்கினார். அதில் தலை, முகத்தில் காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வந்தது.

மேலும் நேற்று அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை நடந்ததாக செய்தி வெளியானது. இந்த தகவலால் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சி ஆனார்கள்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி உடல்நிலை பற்றி இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். விஜய் ஆண்டனி சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

அவர் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்து இருக்கின்றனர். விரைவில் அவர் ரசிகர்களிடம் வீடியோவில் பேசுவார். அவர் பற்றி பரவும் வதந்திகளை நம்பவேண்டாம்” என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top