Connect with us

ஆத்தீ.. விஜய் போட்டிருந்த சட்டையின் விலை இவ்ளோவா.. பலருக்கு இது மாத சம்பளம் கூட கிடையாதே..?

Cinema News

ஆத்தீ.. விஜய் போட்டிருந்த சட்டையின் விலை இவ்ளோவா.. பலருக்கு இது மாத சம்பளம் கூட கிடையாதே..?

நடிகர் விஜய் இன்று ரசிகர்களை சந்தித்த நிலையில், அவர் அணிந்து வந்த சட்டையின் விலை குறித்த பேச்சு தான் எல்லோரிடமும் உள்ளது.

பொதுவாகவே சினிமா நடிகர் நடிகைகள் அணியும் உடை, அவர்கள் கட்டும் வாட்ச், காலில் அணியும் ஷூ, கையில் கொண்டு வரும் பேக் மற்றும் அவர்களின் கார் என அனைத்தும் சர்வதேச பிராண்டாக இருப்பதோடு, அவற்றின் விலை நம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத விலையில் இருக்கும்.

இதனால் அவ்வப்போது சினிமா நட்சத்திரங்கள் அணியும் பொருட்கள் பேசு பொருள் ஆவது உண்டு. அந்தவகையில் நடிகர் விஜய் அணிந்த சட்டையின் விலை தான் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது.

நடிகர் விஜய் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தாலும், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இது நடக்காமலேயே இருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய், இன்று பனையூரில் அவரது அலுவலகத்தில் நாமக்கல், சேலம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சார்ந்த சில ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதற்காக, நடிகர் விஜய் இனோவா கிரிஸ்டா காரில் ரசிகர்களின் ஆரவாரத்த்துக்கு மத்தியில் பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது நடிகர் விஜய், வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார்.

பார்ப்பதற்கு மிக ஸ்டைலாகவும், அதே நேரத்தில் சிம்பிளாகவும் அவர் அணிந்திருந்த உடை, குறிப்பாக அவர் அணிந்து வந்திருந்த வெள்ளை சட்டையும் அந்த பிராண்டும் அதன் விலையும் நம்மை உண்மையில் மெர்சலாக வைத்தது.

இன்று நடிகர் விஜய் அணிந்து வந்தது BURBERRY என்ற பிராண்ட் வகை வெள்ளை சட்டை தான். சட்டையில் அந்த பிராண்ட் லோகோ தெளிவாக தெரியும் வகையில் அந்த சட்டை இருந்தது. இதையடுத்து இணையத்தில் நடிகர் விஜய் அணிந்த சட்டை மாடலை வைத்து விலையை தேடிய போது, அதன் விலை நம்மை ஆச்சரியப்படுத்தியது.

BURBERRY பிராண்டை சார்ந்த Sherwood stretch cotton poplin என்கிற வகையினை சார்ந்த அந்த சட்டையின் விலை ரூ.32,790 ரூபாய் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஷாக்கான பலர், இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் மாதாந்திர ஊதியமாக கூட இல்லாத தொகைக்கு நம்ம தளபதி சட்டை போட்டுள்ளாரா என அங்கலாய்க்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top