Connect with us

ரசிகர்களை சந்திக்க போய்.. போலீசிடம் மாட்டிக்கொண்ட நடிகர் விஜய்.. நடந்தது என்ன..?

Cinema News

ரசிகர்களை சந்திக்க போய்.. போலீசிடம் மாட்டிக்கொண்ட நடிகர் விஜய்.. நடந்தது என்ன..?

சமீபகாலமாக தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நடிகர் விஜய், சில தினங்களுக்கு முன்பு பனையூரில் ரசிகர்களை சந்தித்ததால், தற்போது மேலும் ஒரு சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய், நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் பனையூரில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது தனது ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், போலீசாரின் கவனத்தையும் ஈர்த்து விட்டதால், சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்.

அதாவது, பனையூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் வந்த காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது தான் போலீசாரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது மோட்டர் வாகன சட்டப்படி குற்றம் என்பதால், அவருக்கு ரூ.500 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. முன்னதாக, பனையூர் ரசிகர் சந்திப்பில், விஜய் மக்கள் இயக்க மாநில நிர்வாகியான புஸ்ஸி ஆனந்தின் காலில் ரசிகர்கள் விழுந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, விஜய் நடிப்பில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் குறைந்த தியேட்டர்களே ஒதுக்கப்படும் என மற்றொரு பிரச்சினையும் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை ஸ்ரேயா சரண் Glamour போட்டோஷூட்..!

More in Cinema News

To Top