Connect with us

இலங்கையில் படப்பிடிப்பு.. சூர்யா 42 படம் குறித்த புதிய அப்டேட்..!!

Cinema News

இலங்கையில் படப்பிடிப்பு.. சூர்யா 42 படம் குறித்த புதிய அப்டேட்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் தொடங்க உள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படத்திற்கான வேலைகள் துவங்கிய நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சென்னையில் சமீபத்தில் நடத்தப்பட்டது.

இதையடுத்து தற்போது, ​​படக்குழு இலங்கை சென்று அங்குள்ள வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. அங்கு 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில், அங்கு வைத்தே படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படம் 1,000 வருடங்கள் பழமையான கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கோவாவில் இன்று படப்பிடிப்பு முடிந்த உடன், அடுத்த சில நாட்களில் உடனடியாக அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கோடம்பாக்க வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதற்கிடையே படத்தின் முழுமையான படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் ஏப்ரல் 2023க்குள் முழுமையாக முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சூர்யாவின் நடிப்பில் இது தான் அதிக பொருட்செல்வத்தில் எடுக்கப்படும் படம் எனக் கூறப்படுகிறது.

படம் 10 மொழிகளில் 3டி படமாக வெளியிடப்பட உள்ளதாகக் கூறப்படும் நிலையில், படத்தில் நடிகர் சூர்யா 5 வெவ்வேறு கெட்டப்களில் வர உள்ளதாகக் கூறப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் இப்போதே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top