Connect with us

“அதியா ஷெட்டி, கே.எல்.ராகுல் திருமணத்திற்கு ஆடிக்காரை பரிசளித்த சல்மான் கான்!”

Celebrities

“அதியா ஷெட்டி, கே.எல்.ராகுல் திருமணத்திற்கு ஆடிக்காரை பரிசளித்த சல்மான் கான்!”

பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் திருமணத்திற்கு பல நட்சத்திரங்கள் கோடிக்கணக்கில் விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும், சுனில் ஷெட்டியின் மகளுமான நடிகை அதியா ஷெட்டியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த திங்கட் கிழமை திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்நிலையில் திருமணம் நடைபெற்றது.

அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுல் திருமண புகைப்படம் வெளியானதை அடுத்து பலரும் இணையத்தில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் நடிகை அதியா ஷெட்டியின் தந்தையான சுனில் ஷெட்டி தனது மகளுக்கு மும்பையில் ரூ.50 கோடி மதிப்பிலான ஃபேன்ஸி அபார்ட்மெண்ட் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

மேலும், பாலிவுட் நடிகர் சல்மான் கான் அதியாவுக்கு ரூ.1.64 கோடி மதிப்புள்ள ஆடி காரை பரிசாக கொடுத்துள்ளார். பார்டர், ரெஃப்யூஜி, Baaz: A Bird in Danger போன்ற படங்களில் நடிகை அதியா ஷெட்டியின் தந்தையான சுனில் ஷெட்டியுடன் இணைந்து நடித்த ஜாக்கி ஷ்ராஃப், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள சுவிஸ் சொகுசு கை கடிகாரத்தை பரிசாக கொடுத்துள்ளார். மேலும், அதியாவின் நெருங்கிய நண்பரான நடிகர் அர்ஜுன் கபூர், ரூ.1.5 கோடி மதிப்புள்ள வைர வளையலை பரிசாக அளித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் மட்டுமில்லாமல் கிரிக்கெட் வீரர்களும் கே.எல்.ராகுலுக்கு ஏராளமான விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினர். இதில், விராட் கோலி கே.எல். ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார். அதே போல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி ரூ.80,00,000 மதிப்புள்ள கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக கொடுத்துள்ளார்.

நடிகை அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுலின் திருமணம் பண்ணை வீட்டில் நடைபெற்ற நிலையில், மும்பையில் ஒரு பிரமாண்ட திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top