Connect with us

மீண்டும் வருகிறான் சோழன்..!! இது பொன்னியின் செல்வன் அல்ல..!! நடிகர் பார்த்திபன் செம அப்டேட்..!!

Aayirathil_Oruvan2

Cinema News

மீண்டும் வருகிறான் சோழன்..!! இது பொன்னியின் செல்வன் அல்ல..!! நடிகர் பார்த்திபன் செம அப்டேட்..!!

ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என்றும், அதில் தனக்குப் பதில் தனுஷ் நடிப்பார் என்றும் நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் அப்போது விமர்சன மற்றும் வசூல் ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

எனவே படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவை செல்வராகவன் கைவிட்டுவிட்டார். ஆனால் படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து தான் ஆயிரத்தில் ஒருவன் பட மேக்கிங் குறித்து பலரும் பேச ஆரம்பித்தனர். ஆயிரத்தில் ஒருவனுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவான நிலையில், பலரும் படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என செல்வராகவனிடம் கேட்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன், அதில் தனுஷ் நடிப்பதாகவும், படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படம் வெளியான நிலையில், நடிகர் பார்த்திபன் தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துள்ளார். பிறகு தஞ்சை பெரிய கோவிலுக்கும் சென்று தரிசனம் மேற்கொண்ட பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும். ஆனால் எனக்கு பதில் தனுஷ் அதில் நடிப்பார். முதல் பாகத்திலேயே தனுஷ் நடிப்பதாக இருந்தது. அவருக்கு பதில் தான் நான் நடித்தேன்.

தற்போது இரண்டாம் பாகத்தில் எனக்கு பதிலாக பதில் தனுஷ் நடிப்பார். அவர் நடித்தால் அது இன்னும் சிறப்பாகவே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top