Connect with us

கடைசி நிமிடத்திலும் இப்படி செய்தாரா..இறுதி நிமிடம் பற்றி சொல்லிய எதிர்நீச்சல் நடிகர்!

Cinema News

கடைசி நிமிடத்திலும் இப்படி செய்தாரா..இறுதி நிமிடம் பற்றி சொல்லிய எதிர்நீச்சல் நடிகர்!

மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் மாரிமுத்து அவர்களின் மரணம் தான்…எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்துவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக டப்பிங் அறையில் இருந்து வெளிய வந்த மாரிமுத்து உடனடியாக தனது காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் இது அனைவர்க்கும் அதிர்ச்சி தந்துள்ளது…

அதன்பின் அவருடைய மகளை தொடர்பு கொண்டதன் பிறகு தான் விவரம் என்னவென்று தெரிந்தது என எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் தம்பியாக நடித்து வரும் நடிகர் கமலேஷ் கூறியுள்ளார்…இது எங்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றார்…

மேலும் இயக்குனர் திருச்செல்வம் பேசும்போது நடிகர் மாரிமுத்து மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு,நாங்கள் இன்று சீரியல் ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தோம்…ஆனால் அவருக்கு இன்று சூட்டிங் இல்லை என்பதால் டப்பிங் பேசிவிட்டு வருவதாக கூறியிருந்தார்.

அப்படி கிளம்பிய நேரத்தில் அவருக்கு இப்படி ஆகிவிட்டது…இது எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகிற்கே இழப்பாகும் அவருடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்லுவதென்று தெரியவில்லை.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட ஜீரணிக்கலாம் ஆனால் அவர் நன்றாக இருந்தார் என பேசியுள்ளார்..நல்ல நடிகரை இழந்து விட்டோம் என சொல்லியுள்ளார் அவர்…

சினிமாவிற்காக சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்த மாரிமுத்து தனது இறுதி நிமிடங்களை கூட சினிமாவிற்காகவே செலவளித்துள்ளார்…அவரின் குடும்பத்திற்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "மறந்த நடிகர் மரிமுத்துவை நினைத்து மேடையிலேயே அழுத நடிகர் விமல்! அவர் பகிர்ந்த உருக்கமான தகவல்!"

More in Cinema News

To Top