Connect with us

நான் இங்கதான் இருக்கேன்…எப்படி இருந்த மனுஷன்..!நடிகர் ஜனகராஜ் சொல்லிய தகவல்!

Cinema News

நான் இங்கதான் இருக்கேன்…எப்படி இருந்த மனுஷன்..!நடிகர் ஜனகராஜ் சொல்லிய தகவல்!

இயக்குனர் பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகர் ஜனகராஜ் அவர்கள்…தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிய ஜனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் நெருங்கிய நண்பர் ஆகி விட்டார்…ரஜினி, கமல் படங்களில் அதிகம் நடித்துள்ள ஜனகராஜ் அதனை போல மற்ற நடிகர்களுடனும் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார் அதனால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

நாயகன், விக்ரம், அபூர்வ சகோதரர்கள், ராஜாதி ராஜா, பணக்காரன், அண்ணாமலை, பாட்ஷா, அக்னி நட்சத்திரம்,அரங்கேற்ற வேளை, குணா, வீரா போன்ற படங்களில் ஜனகராஜ்ஜின் காமெடி ரொம்பவே பிரபலமானது அதனால் இவரை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம்.பல வித்தியாசமான சிரிப்பு வெரைட்டியான உடல்மொழி என மாஸ் காட்டியவர் ஜனகராஜ்…இவர் கடைசியாக விஜய் சேதுபதியின் 96 படத்தில் வாட்ச்மேனாக நடித்திருந்தார்.

தொடர்ந்து அவர் சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கு ஜனகராஜ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதுதான் காரணம் என சொல்லப்பட்டது.இது பலருக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது,இந்நிலையில் ஜனகராஜ்ஜின் சமீபத்திய பேட்டி வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது…இதில் அவர் தனது கேரியர் பற்றியும் அமெரிக்கா செட்டில் குறித்தும் மனம் திறந்துள்ளார் அதாவது நான் சென்னையில் தான் இருக்கிறேன் அமெரிக்கா செல்லவில்லை என்றுள்ளார்.

அதுபோல இதுவரை அமெரிக்காவே செல்லாத நான் இப்போது அங்கே செட்டில் ஆகிவிட்டதாக பத்திரிகையில் எழுதுவது வேதனையாக இருப்பதாகக் கூறியுள்ளார் இப்படியெல்லாம் ஏன் அவர்கள் சொல்ல்கிறார்கள் என தெரியவில்லை.

தனது மகனும் சென்னையில் தான் வேலை பார்க்கிறார் அவரும் அமெரிக்கா சென்றதே இல்லை. நல்ல வாய்ப்புகள் அமையாமல் தான் சினிமாவில் நடிக்காமல் இருக்கிறேன். சும்மா ஒரு கேரக்டர் கொடுத்து நடிக்கச் சொன்னால் எப்படி நடிப்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், நல்ல கேரக்டர் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் இப்போதும் எல்லா நடிகர்களுடனும் போனில் பேசிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்…இந்த தகவல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது…

அதனை போல சிலர் என்னைப் பற்றி நல்லதாக எழுதுகின்றனர்.இன்னும் சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை எழுதி கஷ்டப்படுத்துவதாகவும் ஜனகராஜ் கூறியுள்ளார்…அதனை போல விரைவில் நான் நடிக்க வருவது உறுதி என பேசியுள்ளார் அவர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீபுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை! படத்தின் டைட்டில் இதுவா?!"

More in Cinema News

To Top