Connect with us

சர்வதேச அளவில் தனுஷ்க்கு கிடைத்த உயரிய விருது…மகிழ்ச்சியில் திளைத்து தனுஷ் சொன்ன விஷயம்

Cinema News

சர்வதேச அளவில் தனுஷ்க்கு கிடைத்த உயரிய விருது…மகிழ்ச்சியில் திளைத்து தனுஷ் சொன்ன விஷயம்

தனுஷின் அசுரன் திரைப்படம் தற்பொழுது அவருக்கு மேலும் ஒரு கவுரவத்தைப் பெற்றுத்தந்தது. ஆம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் நடைபெற்ற பிரிக்ஸ் திரைப்பட விழாவின் ஆறாவது சீசனில் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

பிரிக்ஸ் திரைப்பட விழா விருது அறிவிப்பின் ஸ்னாப்ஷாட்டை தனுஷ் வெளியிட்டு, தனது முழு மரியாதையுடன் கூடிய நன்றியை வெளிப்படுத்தி உள்ளார்.கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வெற்றிமாறன் இயக்கிய தனுஷ் சமீபத்தில் முடிவடைந்த தேசிய விருதில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். சிறந்த தமிழ்ப் படமாகவும் இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் தனுஷ் விவசாயியாக நடித்துள்ளார். அசுரன் படத்தை நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கிலும் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது .விமர்சன ரீதியான பாராட்டுகளைத் தவிர, அசுரன் படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in Cinema News

To Top