Connect with us

பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் அதிரடி : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி..!

Featured

பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் அதிரடி : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி..!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது . ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம்கண்டது இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் காரணமாக முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட பின் ஆலெனை ஷமி முதல் ஓவரிலேயே வீழ்த்தினார். இதையடுத்து களம் புகுந்த நிகோல்ஸ், டேரில் மிட்செல், கேப்டன் லதாம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரக் கான்வே அகியோரும் இந்திய வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வந்த வழி சென்றனர் . இதனால் அந்த அணி 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய பிரேஸ்வெல் 22 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அந்த அணி 21 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் திரும்பி சென்றதால் அந்த அணி 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது .

இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க,சுப்மன் கில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

20.1 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. 3 விக்கெடுகளை கைப்பற்றிய சமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி இரண்டு வெற்றியுடன் எளிதாக தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top