Connect with us

நம்ம தல தோனி பத்தி இவளோ இருக்கா தெரிஞ்சிக்க!!!

Featured

நம்ம தல தோனி பத்தி இவளோ இருக்கா தெரிஞ்சிக்க!!!

கிருஷ்ணகிரியில் தனக்கு சொந்தமான எம் எஸ் தோனி குளோபல் பள்ளியில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தை தோனி இன்று திறந்து வைத்தார்.மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமியுடன் அப்பள்ளியில் அதிகாரபூர்வ இணைப்புக்கான அறிவிப்பும் இந்த விழாவில் வெளியானது அணைத்து மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் நோக்கத்தோடு இந்த இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தாலும், எம்.எஸ் தோனி தொடர்பாக வெளியாகும் செய்திகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், தோனி தொடர்பான சமீபத்திய அப்டேட் ஒன்று சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர், வீராங்கனைகள், ஓய்வுக்குப் பிறகு வர்ணனையாளராவோ, கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளராவோ தங்களது பணியைத் தொடர்வார்கள். ஆனால், கிரிக்கெட்டைத் தாண்டி வேறு சில துறைகளில் ஈடுபட்டு வரும் தோனி மிலிட்டரி,பிசினஸ் என பலவற்று செய்துள்ளார்.

தோனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ‘தோனி என்டெர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஏற்கெனவே, ‘தி ரோர் ஆஃப் தி லயன்’ என்கிற ஆவணப்படத்தைத் தயாரித்து இந்நிறுவனம், இனி நேரடி திரைப்படங்களைத் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பல தோனி ரசிகர்களுக்கு செம்ம ஹாப்பி எல்லா மொழிகளிலும் ரிலீஸ் ஆகுமாம் பாப்போம்….

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top