Connect with us

‘பட்டாஸ்’ படத்தின் ஜிகிடி கில்லாடி பாடலை வெளியிட்ட படக்குழு-வீடியோ

Cinema News

‘பட்டாஸ்’ படத்தின் ஜிகிடி கில்லாடி பாடலை வெளியிட்ட படக்குழு-வீடியோ

கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ். புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை வரிசையாக படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜிகிடி கில்லாடி என்ற பாடலை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அனிருத் பாடியுள்ளார். தொடர்ச்சியாக பாடல்கள் வெளியாகி வரும் நிலையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top