Connect with us

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி..?

Featured

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி..?

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முனைப்புடன் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இளம் வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியதோடு, 149 பந்துகளில் 208 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இதனையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

அட்டகாசமாக ஆடிய நியூஸிலாந்து வீரர் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 10 ஓவர்களில் 46 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிர வளைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மறுபுறம் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், நியூசிலாந்து அணி புதிய யுகத்துடன் களம் காண உள்ளது . இதனால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top