Connect with us

2023 ஐ.பி.எல். போட்டியில் அர்ஜூன் தெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா..? நட்சத்திர வீரர் கொடுத்த டக்கர் தகவல்..

Featured

2023 ஐ.பி.எல். போட்டியில் அர்ஜூன் தெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா..? நட்சத்திர வீரர் கொடுத்த டக்கர் தகவல்..

நடப்பாண்டுக்கான (2023) ஐபிஎல் தொடர் நாளை மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 சிறப்பான தரமான அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் அன்பு மகன் அர்ஜூன் தெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை.

இதனால் அர்ஜூன் தெண்டுல்கர் நடப்பு தொடரிலாவது ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

நிருபர்களின் அந்த கேள்விக்கு பதிலளித்த அவர் இது ஒரு நல்ல கேள்வி. நம்புகிறேன் என்று ஒற்றை வரியில் சிம்பிளாக பதில் அளித்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாய்ப்புக்காக காத்திருக்கும் அர்ஜூன் தெண்டுல்கர் நடப்பு தொடரிலாவது மும்பை அணிக்காக களமிறக்கப்படுவாரா இல்லையா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "கேப்டன் மில்லர் படத்துல டயலாக் ரொம்ப குறைவு! யார் சொல்லியிருக்காங்க தெரியுமா?!"

More in Featured

To Top